இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், "பொலன்னறுவையில் விவசாய குடியேற்றங்கள் அமைக்கப்பட்ட போது எதிப்பாளர்களால் பல எதிர்ப்புகள் வந்தது, ஆனாலும் அப்போதைய தலைவர்கள் அவற்றை பொருட்படுத்தாமல் செயற்ப்பட்டார்கள். அதனால் தான் இன்று நாட்டின் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்டு பொலன்னறுவை மாவட்டம் வெற்றி பெற்றுள்ளது.
நாம் எதிர்கால டிஜிட்டல் உலகிற்கு செல்லும் போது இப் பொலன்னறுவையாயை நேர்த்திமிக்கதாக (Smart )மாற்ற வேண்டும் இது வே நமது நோக்கமும் இலக்குமாகும்.
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர்
தொழில் மற்றும்வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நாடுபூராவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "கருசரு" திட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலில் முறை கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த எதிர்பார்க்கிறோம். எனினும் இவ்வளவு காலமும் முறைசாரா தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் நடமாடும் சேவையினால் பின்வரும் விடயங்கள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன
அவைகள்:
உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
வெளிநாட்டு தொழிலாளர்களின் முறைப்பாடுகளைப் பெறுதல்,
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளல்,
தொழில் வங்கியில் பதிவு செய்தல்,
வெளிநாடு செல்வதற்கு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்,
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இழப்பீடு/சம்பளம்/காப்புறுதி தொடர்பான சேவைகள்
சிரம வசன நித்தியத்தினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல்,
EPF/ETF தொடர்பான சேவைகள்
தொழிற்பயிற்சி கற்கைகளுக்கான பதிவு மற்றும்
தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு
தொழில்முறை கௌரவத்திற்கு கருசருத் திட்டம், புதியதாக சிந்திக்கும் இளைஞர்களுக்கு "SMART YOUTH CLUB" மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவும் நோக்கத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைக்கு ஸ்மார்ட் போர்டுகள் கையளித்தல்
சமூகத்தில் போதைப்பொருள் தடுப்பு திட்டங்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வழங்குதல்,
உத்தேச தொழில் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு என்பன இதனுள் அடங்கும்.
இம்மாவட்டத்தில் முறைசாரா தொழிற்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் திறமைகள் மற்றும் திறன்கள் மட்டத்தை பரிசோதித்து அதற்கேற்ப அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.
அத்தத்துடன் SMART YOUTH CLUB நிகழ்வினால் இம்மாவட்டத்தைச் சேர்ந்த 500 இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சிகான வாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியம் நிதி உதவியளிக்கிறது.
இரு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட அனுமதிபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதன் போது அங்கு வெளிநாட்டு வேலைகளுக்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன என்பதும் குறிப்பிடதக்கதாகும்.
இந்நிகழ்வில் ஜகத் புஷ்பகுமார வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ,சிறிபால கம்லத் பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆனந்த விமலவீர மற்றும் பல அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
'ஜயகமு ஸ்ரீலங்கா' மக்கள் நடமாடும் சேவையானது அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது அதன் பின்னர் வெல்லவாய, கேகாலை, கண்டி குருநாகல், மற்றும் பொலன்னறுவை போற்ற மாவட்டங்களில் சிறப்பாகவும் மிகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது
ஏழாவது “ஜயகமு ஸ்ரீலங்கா' மக்கள் நடமாடும் சேவை இம்மாதம் 22 ,23 திகதிகளில் மாத்தளை "எட்வர்ட் மைதானத்தில்" நடைபெறவுள்ளது. இதில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
0 comments :
Post a Comment