சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் கல்வி கற்ற புலமைப் பரிசில் 2011ஆம் பிரிவு மாணவ, மாணவிகள் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு (29) வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு பாவா ரோயல் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
"நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நீண்ட நாட்களாகிவிட்டது. எனவே மீண்டும் இணைவோம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வுக்கு மயோன் குழுமத்தின் தலைவரும், ரிஸ்லி முஸ்தபா கல்வி உதவி மற்றும் சமூக சேவைகள் அமைப்பின் தலைவருமான எம். ரிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், அல்ஹிலால் வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல். நஸார், ஓய்வு பெற்ற அதிபர்களான ஐ.எல்.ஏ. மஜீத், திருமதி. எச்.ஏ. லத்தீப் பாடசாலையின் முன்னாள் அதிபர்களான ஏ.பி. முஜீன், எம்.எஸ்.எம். பைஷால் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் பாடசாலையின் முன்னாள் பிரதி அதிபர் எம்.சி.என். றிப்கா, பிரதி அதிபர் எம்.எச். நுஸ்ரத் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் பிரதி அதிபர் ஐ.எல்.எம். மன்சூர் ஆகியோர் நிகழ்வில் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட ஹிலாலியன்ஸ் புலமைப் பரிசில் - 2011பிரிவு மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஞாபகார்த்தமாக நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இரவு சாப்பாட்டுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
0 comments :
Post a Comment