அம்பாரை மாவட்டம், கல்முனை கல்வி வலய, வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் மற்றும் கல்முனை கல்வி வலய கணக்காளர்
வை. ஹபீபுல்லாஹ் ஆகியோரின் வழிகாட்டலில் பலஸ்தீன் காஸா சிறுவர்களின் ஜனாதிபதி நிதியத்துக்கு நிதிகள் கையளிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடரச்சியாக சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலய ஆசிரியர்களினால் 225,000/- இரண்டு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா வலயக்கல்வி அலுவலகத்தில் நேற்று (01) பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் கலந்து கொண்டு வலயக்கல்வி பணிமனையில் இந்த நிதியை கையளித்தனர்.
0 comments :
Post a Comment