மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்காவின் இப்தார் நிகழ்வு : அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.



நூருல் ஹுதா உமர்-
னித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் மாளிகைக்காடு பாவா றோயல் மண்டபத்தில் இடம்பெற்றது.

நோன்பின் மாண்புகள், சமூக நல்லிணக்கம், சகோரத்துவம், இஸ்லாம் வலியுறுத்தும் வாழ்வியல் தொடர்பில் தாருசபா பிரதானி மௌலவி உஸ்தாத் சபா முஹம்மது (நஜாயி) மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணி 17 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி எஸ்.பி திஸாநாயக்க, கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா, கிழக்கின் கேடய தலைவர் எஸ்.எம். சபீஸ், மேஜர். கே.எம். தமீம், அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ஐ.எல்.எம். இர்பான், பயிற்சி அதிகாரி கெப்டன் எம்.டி. நௌஷாட், சாய்ந்தமருது இளைஞர் சேவை பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எ. ஹமீர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் உரையாற்றுகையில் சமூகத்தின் உணர்வு ரீதியான ஒரு நிலைப்பாடு, மனிதர்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு போன்ற பல கருத்துக்களை முன்வைத்தார். அமைப்பின் நிர்வாக செயலாளர் டப்லியூ. ஷவ்தப் உசைம் இந்நிகழ்வை நெறிப்படுத்தினார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :