ஏறாவூரில் தேவையுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு விதவைகள, இஸ்லாத்திற்கு வந்தவர்கள் வறியவர்கள்,நோயாளிகள், தொழில் பாதிக்கப்பட்டோர் என இனம் காணப்பட்ட சுமார் 121 தேவை உடைய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்வு சமூக சேவைகள் அபிவிருத்திஒன்றியத்ததின் தலைவரும்,All Ceylon YMMA ஏறாவூர் கிளை தலைவருமான ஜனாப் MFM.பாறூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் ஜனாபா நிஹாறா மௌஜுத் சமூக சேவை உத்தியோகத்தர் SAC.நஜிமுதின்
ஏறாவூர் பொலீஸ் நிலைய நிருவாக உத்தியோகத்தர் SLM.சரூக் (Si)
U.றஷீத் Ext gs மௌலவி முகம்மத் றியாஸ் (பயாளி) மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் பங்குபற்றிய நிகழ்வில் ஒன்றித்தின் தலைவர் உரையாற்றும் போது
"நாம் முயற்சி செய்தால் நிச்சயமாக தேவை உடையவர்களுக்கு உதவ முடியும் என்பதை அனுபவ ரீதியாக காண்கின்றோம்
நாம் உழைத்து நாம் மாத்திரம் வாழ்ந்தால் போதும் என்று வாழும் இவ்வுலகில் மற்றவர்களின் பசி தீர்க்க நினைப்பது ஒரு சிலர் மாத்திரமே.
நமது இப்பணிக்காக உதவி செய்த அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்த அவர், பயனாளிகளாகிய நீங்களும் உதவியவர்களுக் பிரார்த்தித்து கொள்ளுமாறும்,மேலும் பலஸ்தீனத்தில் அல்லல் படும் நமது உறவுகளுக்கும் பிரார்த்தித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார்.
மௌலவி முகம்மத் றியாஸ் அவர்களின் சொற்பொழிவும் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் அவர்கள் உரையாற்றும் போது ,சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியம் இப்பிரதேசத்தில் பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளது.ஒவ்வொரு ரமழான் காலத்திலும் இவ்வாறு உலர் உணவு பொதிகளை பொருத்தமான தேவையுடைய கஸ்ட்டப்பட்ட மக்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருவது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.அத்துடன்இவ் அமைப்பு நோயாளிகளுக்கான கொடுப்பணவு, கல்வி ரீதியான வேலைத்திட்டங்கள் ,மற்றும் பல சேவைகளை வழங்கி வருவதில் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.இவர்களின் இப்பணியை இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டும் என பிரார்த்திப்பதுடன், இவ்வாறான ஏற்பாட்டை செய்த Ssdo அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றிகளைதெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment