இறக்காமம் பிரதேச இளைஞர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை ஆரம்ப நிகழ்வும் வருடாந்த இப்தார் நிகழ்வும் திங்கட்கிழமை இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஏ.ஆர்.றியாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எம்.அஹமட் றிஜாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இறக்காமம் கிளையின் தலைவரும், பிரபல சொற்பொழிவாளருமான மௌலவி எம்.எச்.வஹாப் (இஸ்லாஹி) அவர்கள் கலந்து கொண்டு விசேட சொற்பொழிவாற்றினார்.
இதன்போது இறக்காமம் பிரதேச செயலக உள வளத்துறை ஆலோசகர் ஏ.எச்.றகீப், இறக்காமம் பொலிஸ் நிலைய பதில் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஜௌபர், அரசியல் பிரமுகர்கள் இளைஞர் சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment