முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறதின நூற்றாண்டு விழா! நாளை காரைதீவில் அங்குரார்ப்பணம்; அமைச்சர் விதுர பிரதம அதிதி.



வி.ரி.சகாதேவராஜா-
லகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் துறவறம் பூண்டு நாளையுடன்(23.04.2024) 100 ஆண்டுகள் ஆகின்றன.

அதனையொட்டி இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நூற்றாண்டு விழா அங்குரார்ப்பண வைபவம் நாளை(23.04.2024) செவ்வாய்க்கிழமை சித்ரா பௌர்ணமியில் காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

1924 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியில் இகிமி.சுவாமி சிவானந்தரிடம் ஞான உபதேசம் பெற்று பண்டிதர் மயில்வாகனன் சுவாமி விபுலானந்தர் ஆனார்.

இன்றைய நூற்றாண்டு விழா அங்குரார்ப்பண வைபவம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ய.அனிருத்தனன் தலைமையில் நடைபெற இருக்கின்றது .
கலாசார சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு , சிறப்பிக்கவிருக்கிறார்.

திருமுன்னிலை அதிதியாக இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மாநந்தா ஜீ மகராஜ் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.

கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொள்கிறார்.

மேலும், சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த், திருகோணமலை மாவட்டம் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனப்பணிப்பாளர் கலாநிதி திருமதி ப்ளோரன்ஸ் பாரதி கென்னடி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

அவ்வமயம், சுவாமிகளின் துறவறதின நூற்றாண்டு விழா பிரகடனம் அமைச்சரால் பிரகடனப்படுத்தப்பட இருக்கின்றது .

மேலும் 2024ஏப்ரல் 24 தொடக்கம் 2025 ஏப்ரல் 24 வரைக்கும் ஆன ஒரு வருட காலப் பகுதியை சுவாமி விபுலானந்தர் ஆண்டாக பிரகடனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :