கிழக்கு மாகாண பிரதி மாகாண ஆணையாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த வைத்தியர் எம்.ஏ.நபீல் நியமனம்!



அபு அலா-
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள பிரதி மாகாண ஆணையாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த வைத்தியர் எம்.ஏ.நபீல் பதவியுர்வு பெற்றுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (06) திருகோணமலையில் வழங்கி வைத்தார்.

கொழும்பு சுதேச மருத்துவபீடத்தில் மருத்துவக் கல்வியை முடித்து யுனானி வைத்தியராக 2001.10.15 ஆம் திகதி பட்டம்பெற்ற அதேவேளை, களனி பல்கலைக்கழகத்திலும் இணைந்து கொண்டு சுதேச வைத்தியத்துறையிலும் பட்டம் பெற்ற இவர், வைத்தியராக நியமனம் பெற்று கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட வேரான்கட்டுக்கொட, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர் போன்ற ஆயுள்வேத வைத்தியசாலைகளில் வைத்திய பொறுப்பதிகாரியாகவும், வைத்திய அத்தியட்சகராகவும் பணி செய்து, கல்முனை பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளராகவும் (Focal Point) பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள பிரதி மாகாண ஆணையாளர் வெற்றிடத்திற்கான இடைவெளியை பூர்த்தி செய்யும் நோக்கில், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலகத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண வைத்தியர்களுக்கான நேர்முக தேர்வில் அதிக புள்ளிகளைப்பெற்று கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள பிரதி மாகாண ஆணையாளராக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :