காரைதீவு விளையாட்டுக்கழகம் பத்தாவது தடவையாக ஆண்டாக நடாத்திய KSC Premier League போட்டிகளில் விபுலானந்தா சனசமூக நிலைய அணி வெற்றி வாகை சூடியது.
ஜனரஞ்சகமான KSC Premier League போட்டிகள் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நேற்று முன்தினம் (31) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கழகத் தலைவர் பொறியியலாளர் ரோட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன் தலைமையில் நடைபெற்ற போட்டியில் காரைதீவு விளையாட்டு கழக அணி, விபுலானந்தா விளையாட்டு கழக அணி, விபுலானந்தா சனசமூக நிலைய அணி ,காரைதீவு கிரிக்கெட் அணி ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன.
நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கழகப் போசகர்களான முன்னாள் பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஸ்ணன் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இறுதிப் போட்டியில் கழக போசகர் வி.இராஜேந்திரனை போசகராகக்கொண்ட வீரர் எல்.சுரேஸ்குமாரை தலைவராகக் கொண்ட விபுலானந்தா விளையாட்டு கழக அணியும், கழக போசகர் வி.ரி.சகாதேவராஜாவை போசகராகக்கொண்ட வீரர் வி.அருள்குமரனை தலைவராகக் கொண்ட விபுலானந்தா சனசமூக நிலைய அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய விபுலானந்த வி.கழக அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 40 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விபுலானந்தா சனசமூக நிலைய அணி ஆக 5 ஓவரில் 47 ஓட்டங்களை பெற்று 7 விக்கட் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றியீட்டியது.
ஏழு விக்கெட்டால் போசகர் வி.ரி.சகாதேவராஜாவை போசகராகக்கொண்ட வீரர் வி.அருள்குமரனை தலைவராகக் கொண்ட விபுலானந்தா சனசமூக நிலைய அணி வெற்றி வாகை சூடியது.
வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்களை கழகப் போசகர்களான முன்னாள் பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஸ்ணன் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் வழங்கி வைத்தனர்.
காரைதீவு விளையாட்டு கழகத்தின் 40 வது ஆண்டு நிறைவில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்தாவது KSC Premier League சம்பியன் வெற்றிக் கிண்ணத்தை தலைவர் வி.அருட்குமரன் உள்ளிட்ட வீரர்கள் மற்றும் போசகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
போட்டிகளுக்கு முழு அனுசரணையை காரைதீவைச் சேர்ந்த லண்டனில் வாழும் ஆனந்தகுமாரசாமி துஷ்யந்தன் வழங்கினார்.
கழகச்செயலாளர் எஸ். கிருஷாந் நன்றியுரையாற்றினார்.
0 comments :
Post a Comment