மருதமுனை பஹட் ஸமான் திடீர் மரண விசாரணை அதிகாரியாக நியமனம்.



ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ்-
ம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக, மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த பஹட் ஸமான் கௌரவ நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் அலுவலகத்தில் வைத்து அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களிடமிருந்து இந்த நியமனத்தை (13) பெற்றுக் கொண்டார்.

1979 இன் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை சட்டத்தின் 108ஆம் பிரிவின் மூலம் கௌரவ நீதி அமைச்சருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறந்த சமூக சேவையாளரான பஹட் ஸமான், மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் 4G ஹேன்ட் லூம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார். இவருக்கு 2024.05.15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :