வெப்பத்தாவெளி குளம், குறுக்கனாமடு அணைக்கட்டு போன்றவற்றுக்கு இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் விசேட விஜயம்.



மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் பொருட்டு பல மில்லியன் செலவில் முன்னெடுக்கப்பட்டு வரும் புலுட்டுமானோடை குளம், இரைச்சகல் குளம், வெப்பத்தாவெளி குளம், குறுக்கனாமடு அணைக்கட்டு போன்றவற்றுக்கு இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் விசேட விஜயம்.

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன திட்டம் எனும் கருத் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை அதிகரிக்கும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன வேலைத்திட்டத்தில் (CSLAP) உலக வங்கியின் நிதியுதவி ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய நீர்ப்பாசன மேம்பாட்டு பணிகளானது கடந்த கால பொருளாதார பிரச்சனை காரணமாகவும் வனவள பரிபாலன திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களின் பிரச்சனை காரணமாகவும் திட்டங்கள் அமுலாக்குவதில் தாமதங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த விடையம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் தலைமையில் கடந்த மே மாதம் 11 திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது குறித்த திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் மேற்படி பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளுக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்டு ஆராய்வது என தீர்மானம் எட்டப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் குறித்த காரணங்களுக்கான பிணக்குகள் தொடர்பிலும் திணைக்களம் சார்ந்த விடையங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து தீர்வினை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நீர்ப்பாசன மேம்பாட்டு வேலை திட்டங்கள் நடைபெற்று வரும் புலுட்டுமானோடை குளம் இரைச்சகல் குளம் வெப்பத்தாவெளி குளம் குறுக்கனாமடு அணைக்கட்டு போன்ற வேலை தளங்களுக்கான நேரடி கள விஜயத்தினை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் முன்னெடுத்திருந்தார்.

இதன்போது குறித்த பணிகளை முடிவுறுத்துவதற்கு தடையாக இருந்த விடயங்கள் தொடர்பில் நேரில் ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பணிப்புரைகளை வழங்கியிருந்ததோடு. குறித்த பணிகளை விரைவுபடுத்தி பருவமழை ஆரம்பிக்கின்ற காலப்பகுதிக்கு முன்னர் முடிவுறுத்தி விவசாய தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான முனைப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதில் புலுட்டுமானோடை மற்றும் இரைச்சகல் குளங்களின் மேலதிக நீர் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு 113.7 மில்லியன் செலவில் குளக்கட்டை, புனரமைத்தல் புதிய துருசு மற்றும் கால்வாய் அமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, மேலதிக நீரை வெளியேற்றுவதற்கான வான் கதவுகள் அமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.அத்தோடு இரைச்சகல் குளத்தின் குளக்கட்டை மேலும் நீளமாக்குதல் தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகிறது. எனவே இவ்விரு குளங்களின் நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாக இதுவரை 750 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இக் குளங்களின் மேலதிக புனரமைப்பு காரணமாக மேலும் 250 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்தோடு வெப்பத்தாவெளி குளமானது 41 மில்லியன் செலவில் புனரமைக்கப் படுகிறது. இதில் குறித்த குளத்தினுடைய குளக்கட்டு உயர்த்தப்பட்டு புதிய நீர்ப்பாசன வாய்கள் என்பனவும் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே குறித்த குளத்தினுடைய மேலதிக புனரமைப்பு காரணமாக இக் குளத்தினுடைய நீர்ப்பாசனத் திட்டம் ஊடாக இதுவரை 40 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மேலும் 40 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை இதனூடாக அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் 37 மில்லியன் செலவில் குறுக்கனாமடு அணைக்கட்டு, நீர்ப்பாசன கால்வாய் என்பனவும் புனரமைக்கப்படுகிறது இதனூடாக 80 ஏக்கர் சிறு சிறுபோக செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது .அதாவது கந்த 2013 ஆண்டு 55 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்ட குறுக்கனாமடு அணைக்கட்டு ஊடாக குறித்த குறுக்கனாமடு குளத்திற்கான மேலதிக நீர் கிடைக்க பெறுவதோடு, மியாங்கல் கண்டத்துக்கான மேலதிக நீர்ப்பாசனமும் கிடைக்கப்பெறுகிறது. எனவே இதனூடாக குறித்த கண்டத்தில் சிறுபோக செய்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சரும் மட்டக்களப்பு அபிவிருத்தி குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் கருத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் ஊடாக தானியம் மற்றும் பழங்கள் உற்பத்திகளை முன்னெடுப்பதாற்கான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில், விவசாய செய்கைகளை இரட்டிப்பாகுவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இரண்டு இலச்சம் ஏக்கர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதில் சிறுபோகத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் மாத்திரமே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, எனவே இதனை 2025ம் ஆண்டு ஒரு இலச்சமாக உயர்த்தி, நவீன விவசாய துறையில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பான முன்னெடுப்புக்கள் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

குறித்த கள விஜயத்தின் போது நீர்ப்பாசன மாகாண பணிப்பாளர் இராஜகோபாலசிங்கம் செங்கலடி பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம், கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் ஜெகன்நாத், காலநிலை சீராக்கல் மாகாண திட்ட பணிப்பாளர் ஆரியதாஸ, மட்டக்களப்பு மாவட்ட செயலக பதில் திட்டமிடல் பணிப்பாளர் சதீஸ்குமார், மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் நவநீதன், மட்டக்களப்பு மாவட்ட, மாகாண நீர்ப்பாசன, பொறியாளர்கள், வட்டார வனவள அதிகாரிகள், எமது கட்சியின் பிரதம பொருளாளர் ஆ. தேவராசா, மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு, கிராம உத்தியோகத்தர்கள்,கமநல அமைப்பு தலைவர்கள் விவசாயிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :