"பைத்துல் ஹெல்ப் ஓர்கேனஷன் போ ரிலீப்" அமைப்பினர் மக்கள் பணியை முன்னெடுக்க ஹரீஸ் எம்.பி நிதி ஒதுக்கீடு !



நூருல் ஹுதா உமர்-
ருதமுனையை தலைமையகமாக கொண்டு அம்பாறை மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் "பைத்துல் ஹெல்ப் ஓர்கேனஷன் போ ரிலீப்" அமைப்பினரை அமைப்பின் தலைவர் ரைஸுல் ஹக்கீம் தலைமையில் சந்தித்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் அவர்களின் சமூக பணிகளை பாராட்டி அவர்களின் சமூகப் பணிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணத்தை அமைப்பின் நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.
இதன்போது முஸ்லிம்களின் சமகால அரசியல் நிலைப்பாடுகள், சர்வதேச அளவில் காஸா உட்பட பல்வேறு தளங்களிலும் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், மருதமுனை மற்றும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் திடீர் மரண விசாரணை அதிகாரி அல்- ஜவாஹிர், பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், "பைத்துல் ஹெல்ப் ஓர்கேனஷன் போ ரிலீப்" அமைப்பின் நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :