மாவடிப்பள்ளி மர்க்கஸ் சாஆத் இஸ்லாமிய்யா அரபுக் கல்லுரியின் அபிவிருத்திக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் 07 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த அரபுக் கலாசாலையை மேம்படுத்தும் பொருட்டு கல்லூரியின் அதிபர் மற்றும் நிருவாகத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து இத்தொகையை அவர் ஒதுக்கீடு செய்துள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஏ.எம். அஸாம் மெளலவி தெரிவித்தார்.
இந்த நிதியின் ஊடாக தற்போது குறித்த வேலைத் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment