கரையோர மீனவர்கள் சந்திப்பு: எங்கள் குழந்தைகள் தொழில்நுட்பம் பயின்ற மீனவர்களாக வலம்வரட்டும் - எஸ்.எம். சபீஸ்



நூருல் ஹுதா உமர்-
கொட்டும் மழை என்றும் பாராமல் பலர் அங்கு வந்திருந்தமை இதில் கருத்து தெரிவித்த எஸ் எம் சபீஸ் அவர்கள்

பெரும் வளமான கடற்பரப்பையும் நில அமைவையும் கொண்டுள்ள நாம் மீனவர்கள் என்றால் பின்தங்கியவர்கள், வருமானங்கள் குறைந்தவர்கள் என்ற தொன்மையோடு வாழ்ந்து மரணித்துவிட முடியாது. இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றால் நமது குழந்தைகள் சிறந்த தரத்திலான கல்வி அறிவோடு மீன்பிடிப்பவர்களாக மாற்றம் பெறவேண்டும் என கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான எஸ் எம் சபீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட மீனவர் அமைப்புக்கள் பல ஒன்றாக சேர்ந்து சபீஸ் அவர்களை தமது மீனவ பகுதிக்கு அழைத்து சந்தித்திருந்தனர். இதன்போது மீனவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

மனிதனுக்கு தேவையான 80 சதவீதமான புரத சத்து மீனில் இருந்து கிடைக்கின்றது. அதனை கஸ்டப்பட்டு கரைக்கு கொண்டு வருகின்ற நாம் துன்பத்தில் வாழ்வது மடமையாகும். இன்று உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் கடலுக்கு சென்றவர்களை கண்காணிக்கும் முறை தொடக்கம் மீனினங்கள் எவ்விடத்தில் இருக்கின்றது என்பதனை துல்லியமாக அறியும் முறைகள் உருவாகி பல தசாப்தங்கள் ஆகிவிட்டது. நாம் இன்னும் பழமை வாதத்திலேயே இருந்து கொண்டிருக்கின்றோம்.

உலகமயமாக்களில் பலநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி பெரும் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் ஒன்றாக மாறிவிட்டது. கடலை அண்டிய பகுதிகளில் களஞ்சியங்களும் மீன் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும், புதிதாக மீன் குஞ்சுகளை உருவாக்கி கடலில்விடும் நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு என்ன கஷ்டம் ஏற்படினும் நமது குழந்தைகள் தொழில் நுட்ப கல்விகளை முறையாக கற்க தியாகம் செய்யுங்கள்.

இதன் மூலமே இன்னும் 10 வருடத்திலாவது எமது மீனவ சமூகம் வருமான வழிகளிலும் புதிய தொழில்களை உருவாக்கி தொழில் வழங்குனர்களாக மாறவும் முடியும் என தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :