அரநாயக்காவும், அஸர்பைஜானும்



-ரீ. எல்.ஜவ்பர்கான்-
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது உலகம்
பூமிக்கு சம்பந்தமில்லை
வானத்தில் நடந்த வரலாறு..
இன்னுமே கண்டுபிடிக்கப்படாத
மௌனப்புதையலான மௌத்து அது
அரநாயக்க மலைகளின் நடுவே
எங்களின் மர(ண) ம் முறிந்து விழுந்தது..
இரண்டு டசின் வருடங்களின் பின்
இன்னொரு இதிகாசம்
அஸர்பைஜான் முகடுகளில்...
அஷ்ரபும் அரநாயக்காவும்
இபராஹிமும் அஸர்பைஜானுமாய்
இரு "இரும்பு"கள் விழுங்கப்பட்போது
இன்னும் எழமுடியாத
மூச்சுத்திணரலுக்கள் மூமினாக்கள்
எஹூதியத்தின் ஈரல் கலையை
கடித்துக் குதறிய
எங்கள் ஈரானிய அமீரே...
அமீர்கள் என்பதனால் தானா
அன்னார்ந்து பார்க்கும் உயரத்தில்
உங்கள் உயிர்கள் பிரிகின்றன..
சம்பவங்களும் சரித்திரங்களுமாகிப்போன
மௌத்துகளின் சொந்தக்காரர்கள் இவர்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :