புரவலா் ஹாசிம் உமா் அவா்களுக்கு இம்போர்ட் மிரர் கௌரவம்!



நூல்களையும் நூலாசிரியர்களையும் வாழவைக்கும் புரவலா் ஹாசிம் உமா் அவா்களை, அவர்கள் ஆற்றிவரும் பணிக்காக பலரும் பலவிதத்தில் இனம் மொழி நாடுகள் கடந்துகூட கெளரவித்து வருகின்றனர்.

ஹாசிம் உமா் அவா்கள் எழுத்துத்துறைக்கு ஆற்றிவரும் பணிக்காகவும் ஏனைய சமூக நல திட்டங்களுக்கு அவர்கள் காட்டும் கரிசனைக்காகவும் இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பின் நிர்வாகம் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எல். முனாஸ் அவர்களது தலைமையில் எடுத்த தீர்மானத்தின்கீழ் அண்மையில் புரவலா் ஹாசிம் உமா் அவர்களுக்கு ஞாபக சின்னம் வழங்கி கௌரவித்தது.

சமூக நலன், எழுத்தாளர்களை ஊக்குவித்தல் மற்றும் தேவையுடைய மக்களுக்கு உதவுதல் போன்ற நல்ல பணிகளை ஆற்றிவரும் ஹாசிம் உமா் அவா்கள் உயிர் வாழும்போதே வாழ்த்தப்படவேண்டியவர்.

அந்த அடிப்படையில் இம்போர்ட் மிரர் ஊடக வலையமைப்பு

“தூண்டுகோலின் பிறப்பிடமாய்

மனித உணா்வினில் கலந்து

சான்றளிக்கும் கல்வியில்

உணா்ச்சிகளை கலந்து

நூல்களை வாழ வைக்கும்

எங்கள் புரவலா் ஹாசிம் உமா் அவா்கள்..!”


என்ற மகுட வாசகத்துடனான தனது கௌரவத்தை புரவலா் ஹாசிம் உமா் அவர்களுக்கு வழகியது. குறித்த ஞாபக சின்னத்தை ஊடக நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான எம்.வை. அமீர் அவர்கள் கொழும்பில் வைத்து புரவலருடான சந்திப்பின்பின்னர் வழங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் அவர்களும் உடன் இருந்தார்.

புரவலா் ஹாசிம் உமா் அவா்கள் மேமன் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றின் காரணமாக அவர், தமிழ் இலக்கியத்துறைக்கும் சமூக நல திட்டங்களுக்கும் ஆற்றிவரும் உயர் பங்கு மிகவும் உயர்வானது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :