மக்களின் தேவையறிந்து சேவையாற்றக்கூடிய கட்சி ஒன்றில் இணைந்து செயற்படுவேன்: றிஸ்லி முஸ்தபா தெரிவிப்பு.



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
க்களின் தேவைகளை அறிந்து சேவையாற்ற கூடிய கட்சி ஒன்றில் இணைந்து செயற்பட போவதாகவும் முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கல்முனையில் (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2020ஆம் ஆண்டு மொட்டுக் கட்சியின் ஊடாகவே அரசியலுக்கு வந்தேன். கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டேன். அந்த தேர்தலில் 5000 பேர் எனக்கு வாக்களித்திருந்தனர். மொட்டுக் கட்சியில் பயணித்த 2 வருடங்களும் என்னால் முடியுமான பணிகளை செய்துள்ளேன்.

என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், Risley Musthafa Education Aid என்கிற அமைப்பை உருவாக்கினேன். அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற வறிய மக்களுக்கு அதிகமான தேவைகள் உள்ளது. அந்த மக்களுக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளேன்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள், நாட்டில் ஏற்பட்ட அரகல, நாட்டுக்கு ஏற்பட்ட வங்குரோத்து நிலை ஆகியவற்றினால் மொட்டுக் கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்தேன். மக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்றக்கூடிய கட்சி ஒன்றில் எதிர்காலத்தில் இணைந்து செயற்படவுள்னே் என்றார்.



கல்முனை பிராந்தியத்தில் நல்லிணக்கத்துடன் கூடிய ஒரு அரசியல் எதிர்காலத்தை நான் எதிர்பார்க்கின்றேன். எனது தந்தைக்கு தெஹியத்த கண்டியில் உள்ள சிங்கள சகோதரர்கள் ஒன்பது ஆயிரம் வாக்குகளை வழங்கியிருந்தார்கள்.



ஆனால் இன்று கல்முனையில் சுயநல அரசியலுக்காக சமூகங்களுக்கிடையில் பிளவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இது ஒரு ஆரோக்கியமான செயல்பாடு கிடையாது. இந்த பிராந்தியம் பல்லின மக்களும் வாழும் ஒரு பிரதேசமாகும். எனவே இங்கு நல்லிணக்கத்தோடு சமூக ஒற்றுமையோடு வாழ வேண்டிய தேவை உள்ளது. எமக்கு பின்னால் எதிர்காலத்தில் இங்கு வாழப்போகும் சிறுவர்களை பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :