கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் முன்னாள் சுற்றாடல் அமைச்சரும், வடமேல் மாகாண ஆளுநருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் பங்குபற்றுதலுடனும் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான எம்.ஏ.ரியாஸ், எம்.எம்.றுவைத்,, கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சஹாப்தீன், கல்குடா இணைப்பாளர் எம்.ஜவாத் மற்றும் விவசாய அமைப்பினர், அரச அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சூழலுக்கு பாதகம் விளைவிக்கும் மரம் அரி ஆலைகள், அரிசி ஆலைகள் என்பவற்றை கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச எல்லைக்குட்பட்ட கடதாசி ஆலை காணிக்குள் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்வரும் காலங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment