சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு மகிழ்ச்சி செய்தியறிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் !



டந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்டு சாய்ந்தமருதின் மேற்குப் பகுதியில் குடியேறியவர்களது நலன்கள் தொடர்பில் செயற்படும் சாய்ந்தமருது அல் அமானா நற்பணி மன்ற பிரதிநிதிகள், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசுடனான கலந்துரையாடல் இன்று (20) ஆம் திகதி சாய்ந்தமருது பிரதான வீதியிலுள்ள அல் அமானா நற்பணிமன்ற பணியகத்தில் மன்றத்தின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.ஏ. பரீட் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின்போது புதிதாக குடியேறிய மற்றும் அந்த பிரதேசங்களில் வளவுகளை கொள்வனவு செய்துள்ள மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அல்ஹாஜ் ஏ.எல்.ஏ. பரீட் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துக் கூறினார்.

இவர்களது தேவைகளை உணர்ந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இவர்களால் கோரப்பட்ட வீதி புனரமைப்பு மற்றும் சிறிய பாலம் அமைத்தல் போன்ற விடயங்களை உடன் செய்துதருவதாக வாக்குறுதியளித்ததுடன் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு தொலைபேசியூடாக வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளருக்கு பணிப்புரைகளையும் விடுத்தார். கடந்த மாதம் அல் அமானா நற்பணி மன்ற உறுப்பினர்களுடான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்ட பாதை அபிவிருத்தி வேலைகளின் ஆரம்ப படிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வார முடிவில் வீதி புனரமைப்பு வேலைகள் தொடங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அல் அமானா நற்பணி மன்றத்தினருக்கு உறுதியளித்தார்.

இந்நிகழ்வின் போது உலமாக்கள், பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல் செயலாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினருமான நூறுல் ஹுதா உமர் மற்றும் அமைப்பின் செயலாளர் எம்.எஸ். முபாறக், பொருளாளர் ஏ.சி.எம். பளீல் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :