டி-நூறு (D-100) திட்டத்தின் அங்குரார்ப்பணம் : மஹ்மூத் மகளிர் கல்லூரி உள்ளக வீதிகளுக்கு காபட் இடும் நடவடிக்கை ஆரம்பித்து வைப்பு !



நூருல் ஹுதா உமர்-
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் டி-நூறு (100) நாள் திட்டத்தின் கீழ் தேசிய ரீதியாக புகழ்பெற்ற கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகளின் அதிக பாவனையில் உள்ள உள்ளக பாதைகளை காபட் பாதையாக மாற்றும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வும் டி-நூறு (100) நாள் திட்டத்தின் தொடக்க விழாவில் இன்று (30) கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், உள்ளூராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ. எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டு உள்ளக பாதைகளை காபட் பாதையாக மாற்றும் நடவடிக்கை பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். அஷிக், கல்முனை மாநகர ஆணையாளர் அஸ்மி ஆதம் லெப்பை, கல்முனை மாநகர உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸிம், சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், வீதி அபிவிருத்தி அதிகார சபை கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் எம். எம். அலியார், அம்பாரை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ. எம். ஸாஹீர், வீதி அபிவிருத்தி அதிகார சபை கல்முனை பிராந்திய நிறைவேற்று பொறியியலாளர் இசட். ஏ. அஸ்மீர், கல்முனை மாநகர பொறியியலாளர் எம். அப்துல் ஹலீம் ஜௌசி, கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஹுபர், கல்லூரியின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு கல்லூரிக்கு நிதி ஒதுக்கிட்டினை செய்தமைக்காகவும், மக்கள் பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருவதை கௌரவிக்கும் விதமாகவும் பிரதம அதிதி அவர்களுக்கும் தற்போதைய கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்கள் அண்மையில் வெளியாகிய இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் - II பதவியுயர்வு பெற்றமையினை பாராட்டி பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :