அமைச்சர் பிரசன்னவின் தலையீட்டில் உடுகம்பளை பாடசாலைக்கு 02 ஸ்மார்ட் வகுப்பறைகள்.



முனீரா அபூபக்கர்-
மினுவாங்கொடை உடுகம்பொல செனரத் பரணவிதான தேசிய பாடசாலையின் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இடம்பெற்றது. அங்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான 02 ஸ்மார்ட் பலகைகள் (Smart Board) பாடசாலைக்கு வழங்கப்பட்டதுடன் அதற்காக செலவிடப்பட்ட தொகை 13.5 இலட்சம் ரூபாவாகும்.
அதேநேரம், அந்த பாடசாலையில் கல்வி கற்கும் 50 பிள்ளைகளுக்கு 2.5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய பாடசாலைக் காலணிகளுக்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீட்டுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

எதிர்காலத்தில் மினுவாங்கொடை கல்விப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளிலும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :