2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5.3% ஆகும். தொழில் துறையும் 11.8% ஆக வளர்ச்சி



நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறுகிறார்..

னத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 12% க்கும் குறைவான எதிர்மறையான பொருளாதாரத்தை கொண்ட ஒரு நாடாக பதிவான இந் நாட்டின், இந்த நிலைமையை நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள் இலங்கையின் பொருளாதார பயணத்தை நம்பிக்கையுடன் பார்க்க முடியும் என்று குறிப்பிட்டார். .

உலக வங்கியின் கணிப்புகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 2.2% வளர்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரம் குறைந்த (மைனஸ்) 7 க்கு மேல் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட ஒரு நாட்டில், இரண்டு வருடங்களில் 2% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தமை மிகவும் நல்ல சாதனை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை பின்பற்றும் வேலைத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தினால் தெளிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அவதானமாக முனநோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :