48 வது தேசிய விளையாட்டு விழா : அம்பாறை மாவட்ட நிந்தவூர் மதீனா வீரர்கள் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை



நூருல் ஹுதா உமர்-
விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படும் 48 வது தேசிய விளையாட்டு போட்டி கிளிநொச்சியில் இடம்பெற்று வருகிறது. இந்த விளையாட்டு நிகழ்வின் கபடி போட்டியில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய நிந்தவூர் மதீனா அணியானது இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது.

இது மாவட்டத்திற்கு வரலாற்று சாதனையாக அமைந்துள்ளதுடன் 48 வருடங்களுக்குப் பிறகு இதுவே முதல் தடவையாக வெள்ளிப்பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே வெண்கலப் பதக்கத்தினை பெற்ற அணி இம்முறை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளனர். விஷேடமாக இந்த அணியின் பல வீரர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையிலும், இந்த வரலாற்று சாதனை கிடைக்கப்பெற்றுள்ளது.

இதில் வடமத்திய மாகாண அனுராதபுரம் அணியினை எதிர்த்து நிந்தவூர் மதீனா அணியினர் வெற்றி வாகை சூடி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர். அம்பாறை மாவட்ட அணி சார்பாக நிந்தவூர் மதினா அணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் கபடி அணியில் தேசிய அணி தலைவர் அஸ்லம் ஷஜா உள்ளிட்ட முப்படைகளின் வீரர்கள் இதில் கலந்து கொண்டதுடன் இவர்களை வழிநடத்தும் மிகப்பெரிய பொறுப்பினை அம்பாறை மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். அனஸ் அஹமட், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ. இம்றுபஸ்கான் மற்றும் கபடி நடுவரும், பயிற்றுவிப்பாளரும் ஆசிரியருமான எஸ்.எம் இஸ்மத் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டிருந்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :