ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் மாணவ மாணவிகளுக்கு மடி கணனிகள்!



ளர்ந்துவரும் கல்வி முன்னேற்றத்துக்கு கணணியின் அவசியத்தை உணர்ந்த,  ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள், தனது ஹாஷிம் உமர் பௌண்டேசனினூடாக தேவையுடைய மாணவர்களுக்கு மடி கணனிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஒரு தொகுதி மாணவ மாணவிகளுக்கு மடி கணனிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு 2024.06.07 ஆம் திகதி கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

புரவலர் ஹாஷிம் உமர் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹாஷிம் உமர் பௌண்டேசனின் நிர்வாகிகள், ஊடகவியலாளர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள், இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் பூரணமான கல்வியறிவை பெறுவதென்றால் சூழலுக்கு ஏற்றவாறு கற்கும் வழிமுறைகளையும் மாற்றி முன்னேறிச்செல்ல வேண்டும். இப்போதைக்கு Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி கவனம் செலுத்தப்படுகின்றது. இவைகளையெல்லாம் மாணவர்கள் கையாள்வது என்றால் மாணவர்களுக்கு கணணி என்பது மிகப்பிரதானமாகும்.

வசதிகுறைந்த மாணவர்களுக்கு கணணி ஒன்றை பெற்று அவர்களது கல்வியை தொடர்வது மிகுந்த கடினமான விடயமாகும். இந்த நிலையை உணர்ந்தே நாங்கள் இவ்வாறான மாணவர்களுக்கு மடிகணணிகளை வழங்க தீர்மானித்தோம். எங்களால் முடிந்த அளவு மாணவர்களுக்கு கட்டம் காட்டமாக மடிகணணிகளை வழங்கவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

மடிகணணிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களது பெற்றோரும் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களுக்கு நன்றிகூறி உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.













 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :