எமதான சொந்த உறவுகளைத் தேடி பிரபஞ்சம் யாழ்ப்பாணத்துக்கு…



திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது எண்ணக்கருவில் முன்னெடுக்கப்பட்டுவரும் 'பிரபஞ்சம்'ஸ்மார்ட் வகுப்பறை வசதிகள் மற்றும் பாடசாலை பஸ் வழங்கும் வேலைத்திட்டங்களின் மேலும் பல கட்டங்கள் எதிர்வரும் நாட்களில் யாழ் மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் பிரகாரம் யாழ் மாவட்டத்தில் 13 பாடசாலைகளுக்கு ரூபா. 1,177,000 பெறுமதியான கணினிகள்,அச்சு இயந்திரங்கள், ஸ்மாட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் திரைகள், அகராதிகள் என்பன வழங்கி வைக்கப்படவுள்ளன. மேலும், பாடசாலையொன்றுக்கு 50 இலட்சம் ரூபா மதிப்பிலான பஸ் ஒன்றும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் இதுவரை 224 பாடசாலைகளுக்கு 224 ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை 2502 இலட்சம் ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளன. பிரபஞ்சம் பஸ் வழங்கும் திட்டத்தின் கீழ் 87 பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 87 பஸ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு 4242 இலட்சம் ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :