சட்டவிரோத உலோகம், இரும்பு, தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் இவைகள் சார்ந்த கழிவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்வது தடை.



அனைத்து மறு ஏற்றுமதிகளும் தொழில்துறை அமைச்சின் பரிந்துரையின் பேரில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.- நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய

நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் நடைபெரும் லோகம், இரும்பு, அது தொடர்பான உபகரணங்கள் மற்றும் இவைகள் சார்ந்த கழிவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் அனைத்து உலோக ஏற்றுமதிகளும் தொழில்துறை அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்..
உலோகக் கழிவுகள், இரும்பு தொடர்பான உபகரணங்கள் மற்றும் தாமிரம், பித்தளை, அலுமினியம், சைனா சட்டி, வெள்ளை இரும்பு, ஹைகார்பன் போன்ற பொருட்கள் மற்றும் இவைகள் சார்ந்த கழிவுப்பொருட்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதால் நாட்க்கு இழந்த போகும் வெளிநாட்ட சேலாவனி குறித்து அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கலந்துக்கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
சுங்க திணைக்கலம் மற்றும் கைத்தொழில் அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்று இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
உலோகம் தொடர்பான ஏற்றுமதிகள் எவை என்பதைக் கண்டறிந்து ஏற்றுமதிக்கு ஏற்ற நிலையில் உள்ள பொருட்களை அடையாளம் காண்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, அனைத்து சட்டவிரோத மீள் ஏற்றுமதிகளும் தடுக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் உலோகம் மற்றும் இரும்பு தொடர்பான உபகரணங்கள் மற்றும் பழைய பொருட்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு கைத்தொழில் அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :