பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க



தில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க நாளை (01) பதவியேற்க உள்ளார்.

பதில் சட்டமா அதிபராக பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக  பாரிந்த ரணசிங்க தெரிவித்தார்.

கடந்த 26ஆம் திகதி சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாகியுள்ளது.

இதன்படி, பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்கவை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவரை சட்டமா அதிபர் பதவிக்கு நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரை எதிர்வரும் காலங்களில் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பாரிந்த ரணசிங்க, நாட்டின் முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஏ.பாரிந்த ரணசிங்கவின் மகனாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :