மட்டக்களப்பு , கோறளைப் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொண்டையன்கேணி கிராமத்திக்கான வரவேற்பு வளைவு கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அக்கிராம மட்ட அமைப்புக்களால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் பிரத்தியேக நிதி பங்களிப்பின் ஊடாகவும் கொண்டையன்கேணி மக்களின் நிதி பங்களிப்பின் ஊடாகவும் குறித்த கிராமத்திற்கான வரவேற்பு வளைவு கோபுரமானது நிர்மானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கோறளைப் பற்று பிரதேச சபை செயலாளர் நவநீதன், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் தம்பிராஜா தஜீவரன் உட்பட கிராம மட்ட அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment