ஆர்ப்பாட்டங்களினால் பிரதேசவாதம் தூண்டப்படுமாக இருந்தால் அது பாரிய விளைவுகளை சமூகத்துக்கு ஏற்படுத்தும்.- உதுமான்கண்டு நாபீர்



"ஒரு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்துகின்ற போது அந்த ஆர்ப்பாட்டத்தை செய்வதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் எது என்பதை அதில் ஈடுபடுகின்றவர்கள் புரிந்து செயல்பட வேண்டும். அவ்வாறான ஆர்ப்பாட்டங்களினால் பிரதேசவாதம் தூண்டப்படுமாக இருந்தால் அது பாரிய விளைவுகளை சமூகத்துக்கு ஏற்படுத்தும்" என நாபீர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ஐ. எம். ஜவாஹீர் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையொட்டியே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்

தொடர்ந்தும் நாபீர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் ரீதியாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ ஒரு சமுதாயம் பிரதேச வாத ரீதியில் சிந்திக்கக் கூடாது. பிரதேச வாத சிந்தனையினால் சமூகங்களின் ஒற்றுமை சீர்குலைந்து அங்குள்ள மக்களின் வாழ்வியல் நிலைமை வெகுவாக பாதிக்கப்படும். இதனால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் நம் மத்தியிலே எழக்கூடும் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்
அக்கரைப்பற்று பிரதேசம் பல படித்தறிந்த கல்வியாளர்களும், சமூக சிந்தனையாளர்களும், உலமாக்களும் அதிகம் உள்ள பிரதேசம் என்பதனால் இப்பிரதேசத்தில் பிரதேசவாத ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுவதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதற்கு மாறாக இது ஒரு பிரதேச வாதத்தை தூண்டும் ஆர்ப்பாட்டமாக இருந்தால் இதனை நாமும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

பொதுவாக அரச அலுவலகங்களுக்கு அதற்கு தகமை பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்படுகின்ற போது அதற்கு எதிராக நாங்கள் செயற்படுவது நமது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும். தற்போது நியமிக்கப்பட்டுள்ள வைத்திய அத்தியட்சகர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர் என்பதனால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் பிரதேசவாத ஆர்ப்பாட்டமாகவே பொது மக்களால் பார்க்கப்படுகிறது.

எந்தவித அரசியல் தலையீடுகளோ அல்லது வேறு வற்புறுத்தலுக்குள் அல்லாமல் சுயாதீனமாக நியமிக்கப்பட்ட ஒரு அரச அதிகாரிக்கு எதிராக சில சுயநல அரசியல்வாதிகளும் அவர்களுக்கு பின்னால் உள்ளவர்களும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை தூண்டி செயற்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்க செயலாகும். இது ஒட்டு மொத்த பிரதேசத்தையும் பாதிக்க செய்வதோடு இங்குள்ள மக்களும் இதனால் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :