திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட அமைச்சர் சுசில் இணக்கம் : ஹரீஸ் எம்.பிக்கு பதிலளிக்கும் போது உறுதியளித்தார்



நூருல் ஹுதா உமர்-
கிழக்கு மாகாணம் திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டது தொடர்பிலும், அந்த மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் மன உளைச்சலில் உள்ள விடயத்தையும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் சபையில் எடுத்துரைத்து அந்த மாணவிகளின் பெறுபேறுகளை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சரை கேட்டுக்கொண்டார்.

இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இந்த விடயத்தில் பேசிக்கொண்டிருந்த போது இதற்கு பதிலளிக்கும் விதமாக எழுந்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இது சம்பந்தமான விசாரணைகள் எல்லாம் முடிவடைந்து விட்டது. பெறுபேற்றை உடனடியாக வெளியிடுமாறு நான் பரீட்சை திணைக்கள ஆணையாளரிடம் கூறியிருக்கிறேன். விரைவில் இந்த பெறுபேறுகளை வெளியிடுமாறு அதிகாரிகளை பணித்துள்ளேன். உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இடம் உறுதிபட தெரிவித்தார்.

குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மாணவிகளின் பெறுபேறுகளை இந்த வாரத்தினுள் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். பெறுபேற்றை இந்த வாரம் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சுசில் உறுதியளித்துள்ளது டன் இந்த விடயத்தில் பெரிய தவறு நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வருகிறது. இது முஸ்லிங்களின் கலாச்சார பர்தா ஆடை அணிந்து வந்தமையால் ஏற்பட்ட விடயம் இந்த பிரச்சனைக்கு இந்த வாரத்தில் தீர்வு வழங்கப்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :