இன்று கல்முனையில் வெகுண்டெழுந்த தமிழ் மக்கள்! போக்குவரத்து முற்றாக பாதிப்பு; அரச அதிபர் வரவில்லை;போராட்டம் வலுப்பெறுகிறது!



வி.ரி. சகாதேவராஜா-
டந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கணடித்து இன்று(24) திங்கட்கிழமை 92வது நாளாக பிரதேச மக்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் போராட்ட வடிவத்தை மாற்றி அதாவது செயலகத்தை மூடி பாதைகளை மூடி ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் போக்குவரத்து முற்றாக செயலிழந்தது.பிரதேச செயலகம் இயங்கவில்லை. நகரில் ஒருவித பதட்டம் நிலவியது.

திட்டமிடப்பட்டு கல்முனை வடக்கு பிரதேய செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை எமது போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்தனர்.
இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளதுடன் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியையும் முற்றுகையிட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் தமிழ்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் , பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கவிந்திரன் கோடீஸ்வரன்,சீனித்தம்பி யோகேஸ்வரன் பா.அரியநேத்திரன் மற்றும் காரைதீவு முன்னாள் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், வடக்கு பிரதேசசெயலக உத்தியோகஸ்தர்கள்,பொதுமக்கள் மற்றும் பொது சமூக அமைப்புகளும் கலந்து கொண்டனர்.
 
90 நாட்களாகியும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம அங்கு வருகை தராதமை பலத்த விசனத்தை ஏற்படுத்தியது.

இன்று களத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரடியாக தொடர்பு கொண்டு பேசினார். இருப்பினும் அவர் வருகை தரவில்லை.
மேலும் உரிய உயர் அதிகாரிகளும் அரசும் எமக்கு தீர்வை தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த இந்த அலுவலகம் 1988களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது.

தொடர்ந்து 1993 இது அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருகின்றது. இருந்தபோதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக பிரயோகித்து வருகின்றனர்.
இதனை எதிர்த்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றார்கள்.

நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை பறிப்பது நீதிமன்றை அவமானப்படுத்தும் செயலாகும்.

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கல்முனையில் தெரிவித்தார்.

இங்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.ஆனால் இதுவரை அவர் இந்த பக்கமே தலை காட்டவில்லை. ஒரு கூட்டத்தையும் கூட்டவில்லை. இது எந்த நாட்டில் உள்ள சட்டம் ? இதுவொரு பச்சைப் பாரபட்சம்.நீதி இல்லையா? இவ்வாறு கேள்வி எழுப்பினார் அவர்

சிவஞானம் சிறீதரன் மேலும் தெரிவிக்கையில்..

அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் நிரந்தரமாக வாழும் தமிழ் மக்களை நிரந்தரமாக துரத்தி அடிப்பதற்கு இன்னொரு சமூகம் கையாளுகின்ற யுக்தி போன்று இதனை நாங்கள் பார்க்கின்றோம்

முழுக்க முழுக்க தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் உள்ள நிர்வாக அலகான பிரதேச செயலகம் செயற்படக் கூடாது என்பதில் ஏனிந்த கொலைவெறி.
அந்த பிரதேசத்திற்கான அதிகாரங்களை பறிப்பதற்கு பலரும் முயற்சி செய்கின்றார்கள். குறிப்பாக கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற அதிகாரத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச் செயல் .
இங்குள்ள பிரதேச செயலாளர் சுமூகமாக சுதந்திரமாக தனது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

இங்கு 300 உத்தியோகத்தர்கள் பணியாற்றுகிறார்கள் .ஆனால் அதன் அதிகாரங்களை பறிப்பதற்கு மறைமுகமாக அதிகார பயங்கரவாதத்தை திணிக்கிறார்கள். இலங்கை நீதியின் படி தர்மத்தின் படி சட்ட நியாயாதிபதி ஒரு அமைதியான தீர்வை இந்த மக்கள் வேண்டுகின்றார்கள்.
ஒரு பொறுப்புள்ள தமிழ்க்கட்சி என்ற அடிப்படையிலே நாங்கள் சமாதானமாக சட்டரீதியாக இப்பிரச்சினைக்கான தீர்வுக்கு நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். அது வெற்றி அளிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது என்றார்.


















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :