நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் எதிர்க்கட்சிகள் ஒளிந்துகொண்டதுடன் ஓடுவதற்கு காலணிகளைத் தேடிக்கொண்டிருந்தனர்.-மனுஷ



நாட்டை மேம்படுத்துவதற்காக தனிநபராக நின்று செயற்படுவதிலும் ஓரவஞ்சனை
நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்த போது ஓடுவதற்கு செருப்பு தேடி ஓடிய எதிர்கட்சிகள், நாட்டுக்காக சவால் விடும் ஒரே ஒருவரின் காலை இழுத்துக்கொண்டு நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என்று காத்திருக்கின்றனர். நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் எனக் கூறினால் அந்த கட்சிகள் வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் ஆரம்பிக்கின்றனர் என மட்டக்களப்பு இந்துக் கல்லூரி விளையாட்டரங்கில் இன்று (28) நடைபெற்ற 'ஜயகமு ஸ்ரீலங்கா' நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

“இந்த கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் மக்களின் பொறுமையை உதாரணமாகக் கொள்ள வேண்டும். அதே பொறுமை அந்த அரசியல்வாதிகளுக்கு இருந்திருந்தால் நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையும் போது ஓடியிருக்கமாட்டார்கள், வீழ்ச்சியடையும் போது அவர்கள் பார்த்து கொண்டிருந்தார்கள். ஓடும் காலணிகளுக்கு, சவால்களை ஏற்று எப்படி ஓடுவது?"
நாட்டு மக்களை நேசித்து பொறுப்புகளை ஏற்காமல் தனது நியமனங்களையும் பதவிகளையும் பார்த்துக்கொண்டார். இந்த மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் சவால்களில் இருந்து "கையாளாகாதவர்கள்" மற்றும் "தற்பெருமைக்கார்கள்" கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது... நாடு வீழும் போது, மக்கள் உணர்வை வலுப்படுத்தாமல் மக்களை வீழ்த்த முயலும் தலைவர்கள் பலர் நம் நாட்டில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

மின்சாரம் இல்லாமல் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்ல முடியவில்லை. எரிபொருள் இல்லாமல் பஸ்ஸில் பயணிக்க முடியவில்லை. அப்போது பாடசாலை மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இம்மாகாணங்களில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையினால் இம்மாகாணங்களின் பிள்ளைகள் முப்பது வருடங்களாக பாடசாலைக் கல்வியை முறையாக கற்க முடியவில்லை. இப்போது இந்த தொழிற்சங்கங்கள் மீண்டும் ஒருமுறை பள்ளிகளை மூடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால், இந்த நாட்டின் பிள்ளைகளின் கல்வியை சீர்குலைத்தால், நமக்கு எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான்.

அவ்வேளையில், எப்பொழுதும் எதிர்ப்புத் தெரிவித்தும், வேலைநிறுத்தம் செய்தும், நாட்டின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போடும் நயவஞ்சகக் குழுவை, மட்டக்களப்புக்குக் அழைத்து வந்து தனிமைப்படுத்த வேண்டும், அங்கு தொழுநோயாளிகளைக் கொண்டுவந்து, சில காலங்களுக்கு முன் வைத்தனர்.
அவர்களை மீண்டும் சமுதாயத்திற்கு செல்ல அனுமதிக்காமல் ஒரே இடத்தில் பிரிக்க வேண்டும். இந்த முப்பது வருட யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர், வடக்கில் உள்ள சிறைச்சாலைகளை தெற்கிலிருந்து தாக்குவதற்கு வடக்கின் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தவர் ஜே.வி.பியின் தலைவர் ரோஹன விஜேவீர. முதலில் பெற்றோல் குண்டுகளை தயாரித்து, சிறுவர் சிப்பாய்களை உருவாக்கியது, புலிகளுக்கு போரிட கற்றுக்கொடுத்தது, கருணா அம்மானுக்கு ஆயுதம் வழங்கியது ஜேவிபி தான். அன்றிலிருந்து இந்த நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க ஆரம்பித்தது ஜே.வி.பி.

இந்த நாட்டில் பல வருடகால யுத்தம் இந்த மாகாண மக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் நாங்கள் பிளவுபட்டுள்ளோம். இல்லை அரசியல் தேவைக்கேற்ப நாம் பிளவுபட்டுள்ளோம். அரசியல் தேவைகளே அதற்கு வழிவகுத்தது என தெரிவித்தார்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :