கல்முனையில் மின் மற்றும் இலத்திரனியல் கழிவுகள் சேகரிப்பு




அஸ்லம் எஸ்.மெளலானா-
லக சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மின்சார மற்றும் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத் திட்டம் நேற்று திங்கட்கிழமை (03) முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபையும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் இணைநது ஒழுங்கு செய்திருந்த இவ்வேலைத் திட்டம் கல்முனை மாநகர சபை முன்றலில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர் எம்.எம்.இஸ்ஹாக்கின் நெறிப்படுத்தலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌஸி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், உள்ளுராட்சி உத்தியோகத்தர் தாரிக் அலி சர்ஜுன், சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் எம்.எம். பயாஸ், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.அஹத், மேற்பார்வையாளர்களான எம். அத்ஹம், யூ.கே. காலிதீன், கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.எம்.எம். அர்ஷாத், எம்.எம். றினா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வேலைத் திட்டத்தின் மூலம் வீடுகளிலும் பொது இடங்களிலும் பாவனைக்கு உதவாமல் ஒதுக்கி அகற்றப்பட்டுள்ள மின்சார மற்றும் இலத்திரனியல் கழிவுகளை மாநகர சபையின் கழிவகற்றல் வாகனங்களில் சேகரித்து முறையாக அகற்றுவதன் மூலம் சூழலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர் எம்.எம்.இஸ்ஹாக் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :