அரச சேவையின் தொழில்சார் பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு தீர்வைத் தவிர தனித்தனியான தீர்வுகளைத் தேடுவது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். - அமைச்சர் சியம்பலாபிட்டிய



அனைத்து பிரச்சனைகளுக்கும் நியாயமான தீர்வுகள் வழங்கப்படும்.
ரச உத்தியோகத்தர்களின் ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தனித்தனியாகத் தீர்ப்பதற்குப் பதிலாக, முழுமைக்கும் தீர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், இதற்காக முறையான முறைமை பின்பற்றப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஆச்சார்ய ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். . அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் நியாயமான பதில் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் நான்கு வருடங்களாக தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மக்களின் உயிரைக் காப்பாற்றும் போராட்டத்தையே அரசாங்கம் எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அரசாங்க ஊழியர்களின் தொழில் வாழ்க்கையில் நியாயமான பிரச்சினைகள் இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தேர்தல் காலங்கள் வரும்போது கோரிக்கையை வென்றெடுக்கும் சூழல் உருவாகும் என்பதை தொழிற்சங்கங்கள் நன்கு அறிந்திருப்பதால், ஒரு குழுவினர் இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த முயல்வதாக திரு.சியம்பலாபிட்டிய தெரிவித்தார். இதற்கெல்லாம் தீர்வு காண நியமிக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த குழு மூலம் நியாயமான தீர்வு கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :