தம்பி மரைக்கார் அரங்கில் ஹஜ் பெருநாள் கவியரங்கு!



அஷ்ரப் ஏ சமத்-
ற்பிட்டி தமிழ் கலை இலக்கிய ஒன்றியத்தின் ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பிக்கும் முகமாக நேற்று வெள்ளிக்கிழமை (21) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் ஹஜ் பெருநாள் கவியரங்கு தம்பி மரைக்கார் அரங்கில் அதிபர் எஸ்.எம் அறூஸ் தலைமையில் நடைபெற்றது. இக் கவியரங்கில் 8 கவிஞர்கள் கவி பாடினார்கள். எச்.எம். சுஜப் (கவிப்புயல்), எஸ்.எச்.எம் நவ்பர், ஜீ.குணசேகரன், எஸ்.சுப்ரமணியம், எம்.எம்.எம். ரவூப், பாத்திமா பர்வின் எம்.ரீ.றிபாஸ் மௌலவி, எம். கேஷினி மோகனதாஸ் ஆகியோர்கள் மேடையில் கவிதைகள் அழகாக பாடினார்கள். இதில் விசேஷம் அம்சம் என்னவென்றால் மூன்று தமிழ் இனக் கவிஞர்கள் பெருநாள் கவிதையில் நபி இப்ராஹீம், இஸ்மாயில் போன்ற வரலாறுகளை கவிகளை பாடினார்கள்.
இந்நிகழ்வுக்கு தினகரன், தினகரன் வாரமஞ்சரி ஊடக அனுசரனை வழங்கியிருந்தது. சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம் மற்றும் அஷ்ரப் ஏ சமத் ஆகியோர்களுடன் அல் அக்ஸா பாடசாலை உப அதிபர்,ஆசிரியர்கள் இலக்கியவாதிகள் கலந்து சிறப்பித்தனர்..









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :