கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை-கைதானவர் குறித்து விசாரணை



நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த குடும்பஸ்தரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மக்பூலியா பகுதியில் இன்று(29) இரவு கேரளா கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை பின்தொடர்ந்து பொலிஸார் பெரும் சிரமத்திற்கு மத்தியில் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய குடும்பஸ்தர் என்பதுடன் அவர் வசம் இருந்து 11,100 மில்லி கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :