ஜெயகமு ஸ்ரீலங்கா அம்பாறை' மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்ச்சித் திட்டம்!



'ஜெயகமு ஸ்ரீலங்கா அம்பாறை' மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்ச்சித் திட்டம் சனிக்கிழமை (22) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அணுசரனையுடன் அம்பாறை எச்.எம். வீரசிங்க மைதான வளாகத்தில் சமூக அபிவிருத்தி மற்றும் வலுவூட்டல் அமைப்பின் உறுப்பினர் ராம் நிக்கலஸின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் ஆரம்பமானது.

நிகழ்ச்சித் தொடரின் முதற்கட்டமாக வெளிநாட்டில் பணிபுரிந்து இலங்கைக்கு வந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கும் வகையில் 'புலம்பெயர்ந்த தொழிலாளர் போக்குவரத்துத் திட்டம்' நடைபெற்றது.மேலும் சுயதொழில் மேம்பாட்டிற்கான மானியத்தின் முதற்கட்டமாக 19 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தலா 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

அத்துடன் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 08 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி புலம்பெயர்ந்த தொழிலாளர் சமுதாயத்தைச் சேர்ந்த 240 குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் உதவித்தொகை , 520 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரண பைகள், 100 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சதொச வவுச்சர்கள், பரிந்துரையின் அடிப்படையில் 20 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள்(Smart Board) வழங்கப்பட்டன.

சனிக்கிழமை(22) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (23) இரு தினங்களில் நடைபெறவுள்ள 'ஜெயகமு ஸ்ரீலங்கா அம்பாறை' மாவட்ட நிகழ்ச்சியில், புலம்பெயர்ந்தோர் சங்க கலந்துரையாடல், கருசரு, ஸ்மார்ட் வாடோ, ஷ்ரம வசன உதவித் திட்டங்கள் தவிர, ஆள் கடத்தல் மற்றும் உழைப்பு குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் தொடர்பான ஆய்வுக்கூடங்களில் அமைச்சர் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளையும் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் - நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி. வீரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயா கமகே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ. விமலவீர, அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபயவிக்ரம, அமைச்சின் மேலதிக செயலாளர் மங்கள கருணாதிலக்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ஹில்மி அஸீஸ், மனிதவள மற்றும் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.ஜி.எச்.என்.ஆர். கிரியெல்ல, பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என். ஜெயபத்ம, அமைச்சின் இணை நிறுவனங்களின் அதிகாரிகள், மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச ஊழியர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

















































 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :