வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் அம்பாறை மாவட்டத்தில் ஊடக மன்றத்தை அமைக்கும் செயற்பாடு முன்னெடுப்பு



லங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஊடக மன்றத்தை ஸ்தாபிக்கும் நிகழ்வு அம்பாறை மொண்டி உல்லாச விடுதியில் இன்று (22) இடம்பெற்றது.

இந்த நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிளியூ.டி. வீரசிங்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் ஹில்மி அஸீஸ் உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர்களும் அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவின ஊகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வாறான ஊடக மன்றங்களை அமைக்கும் பணிகள் குருநாகல, அநுராதபுரம், மொனராகல, கேகாலை, கண்டி, மாத்தளை, பொலநறுவ, வவுனியா, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை, திருகோணமலை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளன.











 










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :