Penna Cement நிறுவனத்தை கையகப்படுத்திய அதானி குழுமம் - உள்ளக திரட்டல் மூலம் கையகப்படுத்தலுக்கு நிதி



Penna Cement Industries Ltd. நிறுவனத்தை (PCIL) கையகப்படுத்துவதற்கான இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, பன்முகப்படுத்தப்பட்ட அதானி குழுமத்தின் சீமெந்து மற்றும் கட்டுமானப் பொருள் நிறுவனமான Ambuja Cements Limited நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது. PCIL இன் 100% பங்குகளை அதன் தற்போதைய விளம்பரதார குழுவான பி. பிரதாப் ரெட்டி மற்றும் குடும்பத்தினரிடமிருந்து கையகப்படுத்தப்படும். இந்த கையகப்படுத்தலுக்கான முழு நிதியுதவியும் அதானி குழுமத்தின் உள்ளக திரட்டல் மூலம் வழங்கப்படும்.

Ambuja Cements நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ஆயுட்கால பணிப்பாளருமான அஜய் கபூர் தெரிவிக்கையில், "இந்த முக்கிய கையகப்படுத்தலானது, அம்புஜா நிறுவனத்தின் விரைவான வளர்ச்சிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். PCIL இனை பெறுவதன் மூலம், அம்புஜா தனது சந்தை இருப்பை தென்னிந்தியாவில் விரிவுபடுத்தவும், சீமெந்துத் துறையில் முழு இந்திய அளவிலான தலைவராக தனது நிலையை வலுப்படுத்தவும் தயாராக உள்ளது. PCIL இன் மூலோபாய ரீதியான அமைவிடம் மற்றும் போதிய சுண்ணாம்புக் கற்களின் கையிருப்பு ஆகியன, மேலதிக முதலீடு மற்றும் திறனைக் குறைப்பதன் மூலம் சீமெந்து அளவை அதிகரிக்க வாய்ப்பளிக்கின்றன. முக்கியமாக, இலங்கைக்குள் நுழையும் பாதையைத் தவிர, இந்தியாவின் தீபகற்பத்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு கடல் வழியான அணுகலை, மொத்த சீமெந்து முனையங்கள் (BCTs) வழங்குவதன் மூலம் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும். PCIL நிறுவனத்தை செலவு ரீதியாகவும், உற்பத்தித்திறனிலும் மிகவும் போட்டித் தன்மையுடையதாக மாற்றுவதும் அதன் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதேமே எமது நோக்கமாகும்." என்றார்.

PCIL ஆனது, 14 MTPA (வருடாந்தம் 14 மெட்ரிக் தொன்) சீமெந்து திறனைக் கொண்டுள்ளது. அதில் 10 MTPA செயற்பாட்டு ரீதியானது என்பதோடு, மீதமுள்ளவை கிருஷ்ணப்பட்டினம் (2 MTPA) மற்றும் ஜோத்பூர் (2 MTPA) ஆகிய இடங்களில் கட்டுமானப் பணியில் உள்ளதோடு, 6 முதல் 12 மாதங்களுக்குள் அவை நிறைவு செய்யப்படவுள்ளது. சீமெந்து திறனில் சுமார் 90% ஆனவை புகையிரத துணைப் பாதைக்கு (siding) அருகில் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் போக்குவரத்து செய்யப்படுகின்றது. ஒரு சில தொழிற்சாலைகள் தனிப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளதோடு, பிரத்தியேக வெப்ப தணிப்பு தொகுதிகளையும் அவை கொண்டுள்ளன. இதன் மூலம் செலவு மற்றும் செயற்றிறன் அதிகரிக்கப்படுகின்றது. அத்துடன், ஜோத்பூர் தொழிற்சாலையில் உள்ள மேலதிக கிளிங்கர் மூலம் 3 MTPA அளவான சீமெந்தை அரைக்கும் திறனுக்கு உதவுவதன் மூலம், 14 MTPA இற்கும் அதிகமான சீமெந்தை உற்பத்தி செய்ய உதவுகின்றது.

கொழும்பில் வருடாந்தம் 0.5 மில்லியன் மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட சீமெந்து பொதியிடல் முனையத்தை கொண்டுள்ள இலங்கையை தளமாகக் கொண்ட Singha Cements நிறுவனத்தை, 2019 மே மாதத்தில் Penna கையகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

PCIL இன் தற்போதைய முகவர்கள் Adani Cement நிறுவனத்தின் சந்தை வலையமைப்புடன் வலிமையாக இணைந்து செயற்படும் வாய்ப்பை பெறுவார்கள்.

About Ambuja Cements Limited (ACL) பற்றி

இந்தியாவின் முன்னணி சீமெந்து நிறுவனங்களில் Ambuja Cements Limited நிறுவனமும் ஒன்று என்பதுடன், பன்முகப்படுத்தப்பட்ட நிலைபேறான வணிகங்களின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் உற்பத்திகளை கொண்ட பல்துறையாளரான அதானி குழுமத்தின் ஒரு உறுப்பினரும் ஆகும். அம்புஜா, அதன் துணை நிறுவனங்களான ACC Ltd. மற்றும் Sanghi Industries Ltd இன் நாடு முழுவதும் உள்ள 18 ஒருங்கிணைந்த சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் 19 சீமெந்து அரைக்கும் அலகுகள் மூலம், அதானி குழுமத்தின் சீமெந்துத் திறனை 78.9 MTPA ஆக உயர்த்தியுள்ளது. TRA Research இன் 2024 வர்த்தகநாம நம்பக அறிக்கைக்கு (Brand Trust Report) அமைய, ‘இந்தியாவின் மிகவும் நம்பகமான சீமெந்து வர்த்தகநாமம்’ என கெளரவிக்கப்பட்டதோடு, The Economic Times இனால் ‘Iconic Brands of India’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அம்புஜா நிறுவனம் செயற்படத் ஆரம்பித்ததில் இருந்து, தனது தனித்துவமான நிலைபேறான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சூழலுக்கு உகந்த நடைமுறைகள் மூலம், தொந்தரவு அற்ற, வீட்டு நிர்மாண தீர்வுகளை வழங்கி வருகின்றது. இந்நிறுவனம் வரலாற்றில் முதன்முறையான பல்வேறு விடயங்களை பதிவு செய்துள்ளது. குறிப்பாக தனது வாடிக்கையாளர்களுக்கு சீமெந்தை மொத்தமாகவும், சரியான நேரத்திலும், செலவு குறைந்த வகையிலும், சிறப்பான வகையிலான ஏற்றுமதியை வழங்குவதற்கும், ஆறு முனையங்களைக் கொண்ட ஒரு தனிப்பட்ட துறைமுகத்தை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மேலும் பெறுமதியளிக்கும் வகையில், நிறுவனத்தின் புத்தாக்கமான தயாரிப்புகளான Ambuja Cement, Ambuja Plus, Ambuja Compocem, Ambuja Kawach ஆகியன தற்போது GRIHA தயாரிப்பு பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களது காபன் வெளியீட்டை கணிசமாகக் குறைக்கவும் உதவுகின்றன. நிலைபேறான வணிக நடைமுறைகளில் முன்னணியில் உள்ள அம்புஜா, SKOCH இன் ‘உள்ளீர்க்கப்பட்ட வளர்ச்சிக்கு பங்களிக்கும் இந்தியாவின் 50 சிறந்த நிறுவனங்கள்’ மற்றும் BW Businessworld இன் ‘இந்தியாவின் சிறந்த மிக நிலைபேறான 50 நிறுவனங்கள்’ பட்டியலில் இடம்பிடித்துள்ளது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :