1000 பக்கங்களைக் கொண்ட நிந்தவுரின் வரலாற்று நூல் வெளியீடு



அஷ்ரப் ஏ சமத்-
நிந்தவுர் மைமுனா காதர் செய்னுலாப்தீன் (பண்டிதை) (ஓய்வு நிலை நல்லம்மா டீச்சர், அதிபர்) அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் ஸ்தாபகர் தனது கணவர் காலம் சென்ற அதிபர் செய்னுலாப்தீன் அவர்களுக்கு சமர்ப்பணமாக நூல் ஒன்றை கொழும்பில் வெளியிட்டுள்ளார்.

இந் நூல் 1000 பக்கங்கள் கொண்டுள்ளது. ”ஒளிரும் முத்துக்கள்” நூல் வெளியீட்டு வைபவம் 18.07.2024 தெஹிவளையில் ஈகில் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக உயர் நீதிமன்ற நீதியரசர் திலிப் நவாஸ் கலந்து கொண்டார் . இந் நூலின் முதல் பிரதியை இந்த நூலை வெளியிட்டார் கலாநிதி டாக்டர் இசட் எம் றபீக் தனது தாய் நூலாசிரியர் மைமுனா காதர் செய்னுலாப்தீன் அவர்களிடம் கையளித்தார்.
அத்துடன் நூலின் விசேட பிரதி நீதியரசர் திலிப் நவாஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கி கொழும்பில் ஆரம்ப நிகழ்வாக துவக்கி வைக்கப்பட்டது.
இந்நூலில் நிந்தவூரில் பிறந்த வாழ்கின்ற கல்வியில் ஏனைய துறைகளில் உயர்ந்த, சிறந்த சேவைகளாலும், உயர்ந்த நற்சாதனைகளாலும் நிந்தவூர் வரலாற்றில் சகல துறைகளிலும் தடம் பதித்து பிரகாசிக்கும் முத்துக்களின் படங்களுடன் அவர்கள் தகவல்களும் நல்லம்மா டீச்சர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் நிழற் படங்கள் அடங்கியுள்ளன.

சுமார் 1000 பக்கங்களைக் கொண்டது. நுாலாசிரியர் வயது 92 அவர் ஏற்கனவே எழுதி சேகரிக்கப்பட்ட தகவல்களை அவரின் மூத்த புதல்வர் வங்கியாளர் கலாநிதி செய்னுலாப்தீன் ரபீக் இந்தியாவுக்குச் சென்று இந்நூலை பதிப்பித்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் வெளியீட்டில் நூலசிரியரின் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சியாமுத்தீன் ஆகியோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :