பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபின் முயச்சியில் சாய்ந்தமருதில் 19 வேலைத்திட்டங்களுக்கு 52 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு!



னாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீனுக்கு வழங்கப்பட்ட விஷேட தியொதுக்கீட்டில் இருந்து, சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகள், சமூகசேவை அமைப்புக்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் போன்றவற்ரின் அவசர தேவைகளுக்கு வேண்டிய பொருட்களை வழங்கிவைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்திலும் கலாச்சார மண்டபத்திலும் 2024.07.17 ஆம் திகதி இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீனின் சாய்ந்தமருது மற்றும் மாவடிப்பள்ளி பிரதேச இணைப்பாளரான அஸாம் அப்துல் அஸீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மேற்படி பொருட்களை வழங்கி வைத்தார்.

நிகழ்வின்போது சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதி திட்டமிடல் உத்தியோகத்தர் கே.எல்.எம். ஹமீட், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி. முகம்மட், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகரும் மருதமுனை அந்நூர் பள்ளிவாசலின் தலைவருமான முக்கர்ரப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீனின் சாய்ந்தமருது மற்றும் மாவடிப்பள்ளி பிரதேச இணைப்பாளரான அஸ்ஸாம் அப்துல் அஸீஸ், பொருளாதார நெருக்கடியின் காரணமாக சிதைவடைந்து போய்க்கிடந்த நாட்டை சீர் செய்து, இவ்வாறெல்லாம் உதவிகளை செய்வதற்கு காரணமாய் இருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாங்கள் எல்லோரும் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் என்றும் ஜனாதிபதியிடமிருந்து குறித்த நிதியை பெற்றுத்தந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன் அவர்களது அயராத முயச்சி எங்களால் மறக்கமுடியாத ஒன்று என்றும் தெரிவித்தார்.

சிதைவடைந்த நாட்டை ஜனாதிபதி சீர் செய்வதைப்போன்று பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப், அபிவிருத்தியில் குன்றிப்போய் காணப்படும் நமது பிரதேசத்தை அபிவிருத்தியின்பால் கொண்டுசெல்லும் விதம் பாராட்டக்கூடியது என்றும் தெரிவித்தார்.

நாடு வீழ்ச்சியில் இருந்து நிமிர்வதேன்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் நமது பிரதேசம் அபிவிருத்தியில் உச்சம் தொடுவதேன்றால் முஷாரப் அவர்களது கரம்களையும் பலப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :