சீன நாட்டு அரசாங்கத்தி;ன் நிதியுதவியுடன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கென பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் கட்டடத் தொகுதியின் முதற்கட்டம் முடிவுற்ற பகுதியினை கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவின் வேண்டுகோளின் பேரில் இக்கட்டத்தினை நிருமாணிப்பதற்கென கடந்த நல்லாட்சி காலத்தில் 450 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நவீன வசதிகள் கொண்ட சத்திர சிகிச்சைக்கூடம், இரத்த வங்கி, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மருத்துவ விடுதி போன்ற வசதிகள் இக்கட்டடத்தில் உள்ளடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் வருண சம்பத் பண்டார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் என். சிவலிங்கம், மாகாண பணிப்பாளர் டாக்டர் டிஜிஎம். கொஸ்தா, பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரலீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment