அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்' கவிதை நூல் வெளியீடு!







முனீரா அபூபக்கர்-
ன்னூலாசிரியரும் ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீனின் 'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்' எனும் கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 07.07.2024- ஞாயிற்றுக் கிழமை பி.ப. 4.00 மணிக்கு கொழும்பு 09 தெமடகொட வீதி, வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் வகவம் தலைவர் கவிமணி என். நஜ்முல் ஹூஸைன் தலைமையில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வர்த்தக, வாணிப அமைச்சரும் அ.இ.ம.கா. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களும் விசேட அதிதியாக மீன்பிடித்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. அனுஷா கோகுல பெர்ணாண்டோ அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கௌரவ அதிதிகளாக சி.பி.எம். ஷியாம் (ரூபவாஹினி கூதா), எம்.எச்.எம். அன்ஸார் (மாஷா பில்டர்ஸ்), எம்.என்.எம், பிஷ்ருல் அமீன் (சட்டத்தரணி), எஸ். ஆர். எம்.எம். இர்ஷாத் (தகிரேட் இன்டியா செய்தித் தளம்), ரகு இந்திரகுமார் (பிஸ்னஸ் வேர்ல்ட் இன்டர்நெஷனல்), மொஹமட் மில்ஹான் (ஜப்பான் லங்கா என்டர்பிரைஸஸ்), கவிஞர் நாச்சியாதீவு பர்வீன், திருமதி சப்ரின் ரின்ஸா (சக்ஸஸ் குறூப் ஒப் கொலேஜ்) செல்வி, டீன் நூர் கனி (ரவ்ளத் அத்பால் இன்டர்நெஷனல்) ஆகியோர் பங்கு கொள்ளவுள்ளனர்.

வரவேற்புரையை கவிஞர் சிமாரா அலியும் வாழ்த்துரையை மாத்தளை எம்.எம். பீர்முகம்மது அவர்களும் வழங்கவுள்ளனர்.

நூல் பற்றிய உரைகளை எழுத்தாளர் பூர்ணிமா கருணாகரன், கவிஞர் எஸ்.ஏ.சி.பி. மரிக்கார் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். நிகழ்ச்சித் தொகுப்பு திருமதி ஆஷிகா பர்ஸான்.

வெளியீட்டு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இலங்கை நெய்னார் சமூகநலக் காப்பகத்தின் தலைவர் இம்ரான் நெய்னார் மேற்கொண்டு வருகிறார்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :