முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் அக்கரைப்பற்று கல்வி வலய கமு/அக்/ அல்- ஹம்றா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பார்வையாளர் அரங்கை 03 மில்லியன் ரூபாய் நிதியில் புனரமைக்கும் பணிகள் நேற்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கமு/அக்/ அல்- ஹம்றா மகா வித்தியாலய அதிபர் யூ.கே. அப்துல் ரஹீம் (நளீமி) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மைதான பார்ப்போர் அரங்க புனரமைப்பு பணியை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் சஹ்வா அரபு கல்லூரி அதிபர் ஐ.எல். ஜலால்தீன் (ஸஹ்வி), ஒலுவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், ஒலுவில் வைத்தியசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு தலைவர் எம்.எஸ்.எம். நிஹால் உட்பட உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பீ.ரீ. ஜமால், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தினர், பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலை தேவைக்கான தளபாட கொள்வனவுக்கு பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நான்கு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment