ஆசிரியர்கள், அதிபர்கள் தத்தமது பொறுப்புக்களை திறமையாக கையாள வேண்டும்.-மூன்று நூல்கள் வெளியிட்டு விழாவில் அதாவுல்லா.



எம்.ஏ. முஹம்மது றசாக்-
ய்வு நிலை உதவிக் கல்வி பணிப்பாளரும் பௌதிகவியல் ஆசிரியருமான ஏ.எல்.ஏ. முஹம்மத் யூசுபின் அலைவுகளும் அவைகளும் 1, அலைவுகளும் அவைகளும் 11 மற்றும் ஒளியியல், சடப் பொருளும் கதிர்ப்பும் எனும் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா கடந்த (20) சனிக்கிழமை "அன்னை ஷாலிஹா மன்றம்" அக்/ஆயிஷா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் (அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை) மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லா பங்கேற்று நூல்கள் வெளியீட்டினை செய்துவைத்தார். இந்நிகழ்வு ஓய்வு நிலை உதவி கல்வி பணிப்பாளர், ஏ.உமர்லெப்பை தலைமையில் இடம்பெற்றது.

பௌதிகவியல் நமது வாழ்வுடன் தொடர்பு பட்டது. ஆத்மீகம் இல்லாமல் கல்வி அறிவினை இலகுவாக நமது மூதாதையர்களால் ஊட்டப்பட்டது. ஆசிரியர்கள் இல்லாமல் ஆத்மீகம் பௌதீகம் சம்பந்தப்பட்ட ஒரு எல்லைக்குள் எழுதலாம்.

போதிய துறையினை முழுதாக அறிந்து கொண்டால் இறை நேசத்தையும் கல்வியினையும் அடைய முடியும். ஆசிரியர்கள் அதிபர்கள் தத்தமதே பொறுப்புக்களை திறமையாக கையாள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ எம் அதாவுல்லா தெரிவித்தார்..

நமது பிராந்தியத்தில் கல்வி அறிவு ஏதாவது துறைகளில் உதாரணமாக நாட்டார் பாடல்கள் கவிதைகள் சிறுகதைகள் அவர் அவர்களுக்கு வேண்டிய மாதிரி எழுதலாம் அவைகளில் கல்வி அறிவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. அறிவு தேவைக்கேற்ப இறை கல்வியின் வளர்ச்சியையும் அடைந்துள்ளது.

ஆனால் இந்த இந்த புத்தகங்கள் அப்படி எழுத முடியாது கவனமாக எழுதப்பட்டிருக்கும் பணியினை எழுத்தாளர் கையாண்டு உள்ளார் மக்கள் சார்பாக நாம் அவரை வாழ்த்துகின்றோம் என்று தெரிவித்தார்.

கணிதம் விஞ்ஞானம் என்பது எல்லாமே ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது "சரஸ்வதி பொங்கி எழுந்தது" ஆத்மீகம் பாச்சபட்டது நாங்கள் அறிவடைந்தவர்களாக இருக்கின்றோம் என்று சொன்னாலும் மாத்திரம் போதாது.

இன்று துறை சார்ந்த ஆசிரியர்கள் பெரும் குறைபாடாக உள்ளனர். கடந்த காலங்களில் பாரிய கஷ்டங்களை அனுபவித்து இருக்கின்றோம். மக்களைச் சென்றடைவதற்கு இலகுவான கட்புல செவிப்புல முறையினை பயன்படுத்துங்கள் எந்த மொழியாயினும் கல்வியினை தேடிக் கொள்ளுங்கள்.

கற்றவர்களுக்கும் அறிந்தவர்களுக்கும் மாணவர்களுக்குமான பாடவிதானம் தொடர்பாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. ஆசிரியர்கள் அதிபர்கள் தத்தமது பொறுப்புக்களை திறமையாக கையாள வேண்டும். அதிபர்களாக பரிணாமிக்க கூடிய ஆளுமை உள்ள ஆசிரியர்களை நாம் இனம் கண்டு அவர்களுக்கு பட்டறையில் போட்டு தீட்டி முறையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அதிபர் தேர்வு பரிட்சைக்காக அனுப்ப வேண்டும்.

படித்த எத்தனை பேர்கள் பல்கலைக்கழகங்களிலும் வெளிநாடு என்றெல்லாம் செல்லுகிறார்கள் பாடசாலையில் கல்வியூட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இங்கு கூடிய கல்விமான்கள் ஊரில் உள்ளவர்கள் துறை சார்ந்தவர்கள் ஒன்று கூடி சில ஏற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் மாணவர்களை பரீட்சைக்கும் தயார் படுத்தலாம். ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் அதிகரிக்கும் இன்றைய எதிர்கால தேவைகள் கருதி இன்னும் பயனுள்ள நூல்களை மாண சமூகத்து மாணவ சமூகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

கௌரவ அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இந்திரவியல் பொருளியல் துறை தலைவர் பேராசிரியர் ஏ எம் முசாதிக் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானத்துறை பகுதிகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி யூ எல் செய்னுதீன் ஆகியோரும் விசேட அதிதியாக ஓய்வுநிலை உதவி கல்வி பணிப்பாளர் எம் ஏ அப்துல் வாஹித் கலந்துகொண்டதுடன் அக்/ அஸ்றாஜ் ம.வி அதிபர் ஏ.ஜி. பஸ்மில் மற்றும் சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான சிராஜ் மசூர் இவ்விருவரின் விமர்சனப் பார்வை நூல்களின் அறிமுகம் நிகழ்த்தினார்

நூலின் முதல் பிரதியினை நூலாசியரிடமிருந்து ஏஎம்எஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஏ. தஸ்ரிப் மரியம் பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் கௌரவ அதிதிகள், விசேட அதிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கலந்து கொண்டனர்.























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :