சர்வதேச ஊடகவியலாளர் பாறுக் ஷிஹானுக்கும் விஷேட கெளரவம்



க்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் “தேசத்திற்காய் நாம் பிரஜை விருது” வழங்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி அல்-மனாா் அறிவியல் கல்லூரியின் அப்துல் ஜவாத் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (27) எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளா் ஜே.எல்.எம்.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்புத் தரப்பைச்சோ்ந்த உயரதிகாரிகளுக்கும் தேசத்திற்காய் பங்காற்றியவா்களுக்கும் கௌரவமளிக்கப்பட்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியா் Dr றமீஸ் அப்துல்லாஹ், கலை, கலாசாரபீட பீடாதிபதி பேராசிரியா் எம்.எம்.பாஸில், பேராசிரியர் கலாநிதி இஸ்மாயில், சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி ஏ.ஏ.எம்.நுபைல், ஏ.எம்.றியாஸ் அஹமட்,
மட்டக்களப்பு வா்த்தகா் சங்கத்தலைவா் கே.எம்.கலீல், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளா் மர்சூக் அகமட் லெவ்வை உட்பட புத்திஜீவிகள், ஊர்ப்பிரமுகா்கள், ஊடகவியலாளா் எனப்பலரும் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில் பாதுகாப்புத்தரப்பு அதிகாரிகள், தேசத்திற்கு பங்காற்றியவா்கள் என 50 போ் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மேலும் சர்வதேச ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் விஷேட கெளரவம் இந்நிகழ்வில் பெற்றுக்கொண்டார்.

எக்ஸத் ஊடக வலையமைப்பின் 2024ம் ஆண்டுக்கான “தேசத்துக்காய் நாம் பிரஜை விருது” சேவைநலன் பாராட்டு விழாவில் சர்வதேச ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் விருது, நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

தமிழ்,முஸ்லிம் மக்களின் ஐக்கியத்திற்காகவும் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களின் அவலங்களை உள்நாட்டிலும் சர்வதேச ஊடகங்களுக்கும் செய்திகளாக உடனுக்குடன் கொண்டு செல்வதன் காராணமாக ஊடகத்துறைக்கு ஆற்றிய மற்றும் ஆற்றி வரும் அளப்பரிய சேவைகளைப் பாராட்டிக் கெளரவிக்கும் வகையில் “தேசத்துக்காய் ஒன்றிணைவோம், தேசத்தைக் காத்திடுவோம்” எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பினால் கடந்த 27.07.2024ம் திகதி ஒழுங்கு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வில் இந்நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :