பாழடைந்துள்ள மருதமுனை மக்கள் மண்டபத்தை புனரமைத்து பாவனைக்கு விட நடவடிக்கை.!



அஸ்லம் எஸ்.மெளலானா-
டந்த பல வருடங்களாக பாழடைந்து கவனிப்பாரற்றுக் காணப்படுகின்ற மருதமுனை மக்கள் மண்டபத்தை விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.

அண்மையில் கல்முனை மாநகர ஆணையாளராக பொறுப்பேற்று ஒரு சில தினங்களிலேயே இரு மாடிகளைக் கொண்ட இந்த மண்டபத் தொகுதியினதும் அதன் சுற்றுச்சூழலினதும் அவல நிலையை கவனத்திற் கொண்ட அவர், அதனை உடனடியாக சீர்செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு விடுவதற்கு தீர்மானித்திருந்தார்.

இதற்கு அமைவாக குப்பை கூளங்களாலும் காடு வளர்ந்தும் காணப்படுகின்ற மருதமுனை மக்கள் மண்டப வளாகம் கடந்த சில தினங்களாக கல்முனை மாநகர சபையினால் துரிதமாக துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது. இதனை பராமரிப்பதற்கென ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். புனரமைப்பு வேலைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதையடுத்து விரைவாக இந்த மண்டபத்தை மக்கள் பாவனைக்கு விடுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :