பொலிஸ் பாவனையில் இருந்த கலாசார மண்டபம் கல்முனை மாநகர சபையினால் பொறுப்பேற்பு.!



அஸ்லம் எஸ்.மௌலானா-
பொலிஸாரின் பாவனையில் இருந்து வந்த பெரிய நீலாவணை கலாசார மண்டப வளாகம் கல்முனை மாநகர சபையினால் முழுமையாக பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான இந்த வளாகம் மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸின் வேண்டுகோளின் பேரில் - பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை - பெரிய நீலாவணை கலாசார மண்டப வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ள பொலிஸாரின் விடுதி வசதிக்காக கல்முனை மாநகர சபையினால் மாற்று இடம் ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத் திட்டத்தின் (LDSP) கீழ் பெரிய நீலாவணையில் கலாசார மண்டபம் ஒன்றை நிர்மாணிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, முதலாம் கட்டப் பணிகள் முடிவுற்று- இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் பெரிய நீலாவணையில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் இதனை தற்காலிக தங்குமிட விடுதியாக பயன்படுத்தி வந்தனர்.

தற்போது இக்கலாசார மண்டபத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து பொலிஸாரின் விடுதியை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் மேற்கொண்டிருந்தார்.

இதனால் கலாசார மண்டப நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் காணப்பட்ட தடைகளும் சிக்கல்களும் நீங்கியிருப்பதாகவும் இதன் மூலம் நீண்ட நாள் இழுபறிக்கு தீர்வு கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :