அதி கஸ்ரப்பிரதேசமான அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் இயங்கி வரும் மாதர் சங்க பாலர் பாடசாலைக்கு தேவையான பெயர் பலகையையும் இரண்டு ஆசிரியர்களுக்கான கொடுப்பனவும்.கல்வி கற்கும் (20) மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் இணைந்த கரங்கள் அமைப்பு வழங்கி வைத்துள்ளது.
பாடசாலை சமுகத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இணைந்த கரங்கள் உறவுகளோடு இணைந்து பயணிக்கும் திரு,தருஷன்,புவனேஸ்ராஜா அவருடைய நிதி பங்களிப்பில் மாதர் சங்க பாலர் பாடசாலையின் இரண்டு ஆசிரியர்களுக்கு மாதாந்தம்(Rs:8000)ரூபாவும், (20) மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களும், பாடசாலைக்கு தேவையான பெயர் பலகையும் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பெயர்ப் பலகை முன்பள்ளி வெளிக்கள உத்தியோகத்தர் பி. மோகனதாஸ், கண்ணகி வித்தியாலய அதிபர் த.இராசநாதன், கண்ணகி கிராமம் சமூக சேவையாளர் கோகுலன் ஆகியோருடன் இணைந்த கரங்கள் உறுப்பினர்களான காந்தன். சுரேஸ் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது...
0 comments :
Post a Comment