முஸ்லீம்களின் ஜனாஸா எரிப்பு –மன்னிப்பை விட தண்டனையே அவசியம் – பாரளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா



அஸ்ஹர் இப்றாஹிம்-
முஸ்லீம்களின் ஜனாஸா எரிப்பு தொடா்பாக மன்னிப்புக் கொடுப்பதை விடுத்து அதற்குக் காரணமானவா்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா வலியுறுத்தியுள்ளாா்.
கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற அமா்வில் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

இவ்விடயம் தொடா்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா மேலும் தொிவிக்கையில், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மீறி ஜனாஸாக்களை எரிக்க வர்த்தமானி ஒன்றை அப்போதைய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டிருந்தாா்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஜனாஸாக்களை எாித்தமை குறித்து மன்னிப்பு கோாியமை நல்ல விடயம்.

ஆனால் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் மீறி ஜனாஸா எரிக்க வர்த்தமானி வெளியிடப்பட்டமையால் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டது.

இவ்விடயம் தொடா்பாக நான் பல தடவை இந்தச் சபையில் கேள்வியெழுப்பியுள்ளேன். எனவே மன்னிப்புக் கேட்பதை விட அதற்கான தண்டனையை யாருக்கு வழங்குவது என்பதை இந்த நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் ஏ.எல்.எம்.அதாவுல்லா மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :